www.maniomsakthi.page.tl
திருவெக்கா,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம்.
பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரத தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகம் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன்விளக்கொளி பெருமாளாக திருதன்காவில் தோன்றினர். யாகத்தை தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம்எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ, நாராயணன் எட்டு கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய் வந்து சர்பத்தை அழித்தார். பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாக தீயை அழிக்க, சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய் பெருகிவர, பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயை காத்த தலமே திருவெக்கா ஆகும். இதனாலே பெருமாள் வெக்கனை கிடந்தான் என அழ்வர்களால் அருளப்படுகிறார்.
கணிகண்ணன் திருமழிசையாருடைய சீடன். கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக்கவிதைபாடச்சொல்ல அவர் மானிடனைப்பாடுவது குற்றம் என்று கூறி திருமாலைப்பாடினார். அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,
என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். பெருமாளை தொடர்ந்து திருமகளும் செல்ல கச்சி நகரம் இருண்டு மங்கலம் குறைந்து. இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி
என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு. இதனாலே பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என போற்றப்பெருகிறார்.